சென்னையில் இரவு தொழிலதிபர் வீட்டுக்குள் தனது கணவர் மற்றும் ரவுடிகளுடன் நுழைந்த சஜினி என்ற நடிகை ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றுள்ளார்.
முத்தையா(72) என்ற தொழிலதிபர் தனது வீட்டுக்கதவை மூட வரும்போது திடீரென உள்ளே நுழைந்த நடிகை சஜினி, அவரை ரவுடிகளுடன் சேர்ந்து பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.
அவர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிடவே, அப்படியென்றால் காசோலை வேண்டும், அது கொடுக்காமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து முத்தையா 10 லட்சம் ரூபாய் கசோலையை கொடுத்துள்ளார்.
நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் பலர் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, என்னை மிரட்டி, ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி இருந்தார்.
இது தொடர்பாக பொலிசார் கூறியதாவது, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.






