போதை மருந்து கடத்திய மிஸ்.இத்தாலி பட்டம் வென்ற அழகி அதிரடி கைது!!

525

Samantha Scarlinoதென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு போதைமருந்து கடத்திய மிஸ். இத்தாலி பட்டம் வென்ற 32 அழகி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சமந்தா ச்கார்லினோ என்ற32 வயது இளம்பெண் தற்போது மொடலாக பணிபுரிந்து வருகிறார். இவர் 1999ம் ஆண்டு மிஸ். இத்தாலி பட்டம் வென்றவர். இவர் நேற்று மிலன் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 500 கிலோ கோகைன் என்ற போதைப்பொருள் கடத்துவதாக பொலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து, அந்த ஓட்டலில் அதிரடி ரெய்டு நடந்தது. இதில் அவர் கையும் களவுமாக போதைப்பொருளுடன் பிடிபட்டார்.

இவர் தென் அமெரிக்காவில் இருந்து பெல்ஜியம் ஹோலந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பலமுறை போதைப்பொருள் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு பெரு நாட்டில் உள்ள ஒரு பொதைக்கும்பல் தலைவனாக இருக்கிறான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவருக்கு போதை மருந்து கடத்த உதவி புரிந்ததாக கூறப்படும் 60வயது கிண்க்பின் என்பவனை பொலிஸார் தேடி வருகின்றனர். மிஸ். இத்தாலி அழகி பட்டம் வென்றதால் இவர் அடிக்கடி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். எனவே இவரை பயன்படுத்தி மிக எளிதாக கடந்த 15 ஆண்டுகளாக போதைப்பொருளை ஒரு கும்பல் கடத்தி வந்துள்ளது. நேற்றுதான் அது முடிவுக்கு வந்துள்ளது.