பொதுநலவாய மாநாடு புறக்கணிப்பால் இந்தியாவுக்கே அதிக பாதிப்பு : அவுஸ்திரேலிய ஊடகம்!!

577

manmohanஇந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்காமை, இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என அவுஸ்திரேலிய ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கென்பரா டைம்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை மாநாட்டை புறக்கணித்தமை காரணமாக இந்தியா பல இழப்புக்களை சந்திக்குமே தவிர நன்மைகளின் அளவும் மிகவும் குறைவானதே என ஊடகத்தின் பத்தி எழுத்தாளரான அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகமான க்ரோவ்போட்டின் விரிவுரையாளர் ரமேஸ் தாகூர் தெரிவித்துள்ளார்.

மாநாட்டை புறக்கணித்தமைக்கான விலையை இந்தியா செலுத்த நேரிடும். இலங்கை மனித உரிமை நிலைமைகளின் அடிப்படையில் மன்மோகன்சிங் இந்த முடிவை எடுக்கவில்லை. தமிழக மக்களின் வாக்குகளை மையமாகக்கொண்டே இந்த முடிவை மன்மோகன் எடுத்திருந்தார். எனவே மாநாட்டை புறக்கணித்தமை இந்தியாவுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.