கண்டெடுத்த 2.5 லட்ச ரூபா பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த நபர்!!

545

cashகண்டெடுத்த இரண்டரை லட்ச ரூபா பணத்தை மீள உரிமையாளர் ஒருவரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று பதுளை பசறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டரை லட்ச ரூபா பணமும், இரண்டு செக் புத்தகங்களும் அடங்கிய பை ஒன்றை நபர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.
இந்தப் பையை குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

பொலிஸார் பணத்தை தொலைத்த நபரை தேடிக் கண்டு பிடித்து, கண்டெடுத்த நபரின் கைகளினாலேயே அந்தப் பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆர்.கே.ஆர். சுனில் என்பவரே இவ்வாறு பணத்தை கண்டெடுத்துள்ளார். யூ.துவாயின் என்பவரே பணத்தை தொலைத்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பசறைக்கு சென்று திரும்பிய போது பணப் பை விழுந்து விட்டதாக துவாயின் தெரிவித்துள்ளார்.