பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் படிமம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது. ராட்சத உருவம் கொண்ட டைனோசர் மிருகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டது.
ஆனால் அந்த மிருகம் வாழ்ந்ததற்கான தடயங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இரு கால்களைக் கொண்ட 30 அடி நீளமும் மூன்று தொன் எடையும் கொண்ட டைனோசரின் படிமம் வட அமெரிக்காவில் கிடைத்துள்ளது.
சிகாகோவில் உள்ள பீல்டு அருங்காட்சியகம் மற்றும் வடக்கு கரோலினாவின் இயற்கை விஞ்ஞான அருங்காட்சிய கத்தின் விஞ்ஞானிகள் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள டைனோசர் படிமத்தை ஆய்வு செய்ததில் இந்த டைனோசர், மாமிச பட்சிணி வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.





