வீரம் படத்தில் பஞ்ச் வசனங்களை தவிர்த்த அஜித்!!

589

Ajithவீரம் படத்தில் பஞ்ச் வசனம் பேச அஜித் மறுத்து விட்டார். ஏற்கனவே அஜித்தின் பல படங்களில் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றன. வீரம் படத்திலும் பஞ்ச் வசனங்கள் வைத்து இருந்தனர். ஆனால் அதை பேச அஜித் மறுத்துவிட்டார். இதனால் வசனங்கள் மாற்றி எழுதப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்ச் வசனங்களே இல்லாத படமாக வீரம் வருகிறது. இந்த படத்தில் அஜித் நான்கு தம்பிகள் மேல் பாசம் வைத்துள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். விதார்த், சந்தானம், அப்புக் குட்டி, மயில்சாமி, வித்யுலேகா ராமன் போன்றோரும் உள்ளனர்.

இதில் அஜித் காமெடியும் செய்கிறாராம். ரஜினியின் முரட்டுக்காளை சாயலில் குடும்ப சென்டி மென்ட் படமாக உருவாகியுள்ளதாம். படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன.