வவுனியாவில் கொண்டாடப்பட்ட ஆறுமுகநாவலர் குரு பூஜை!!(படங்கள்)

823

கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை வவுனியாவில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டதுடன், ஆறுமுக நாவலர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய சேவைகள் தொடர்பாகவும் அவர்கள் இன்றும் பூசிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் தமிழ்மணி அகளங்கன், ஆசிரியர் கதிர்காமசேகரம், வவுனியா கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இக் குரு பூசை நிகழ்வில், திருமறைக்கலாமன்றத்தின் கலைஞர் மாணிக்கம் ஜெகன், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம், சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவ.கஜன் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

2 3 4 5