ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல : நாராயணசாமி!!

705

narayanasamyராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்..

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் திடீரென்று மாற்றுக் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
அரசு உயர் அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஓய்வு பெற்ற பிறகு வேறு மாதிரியும் மாற்றி மாற்றி பேசி வருவது சரியல்ல.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முழுவதும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மறு விசாரணை கோருவது சரியல்ல என்றார்.