வவுனியா பொது மலசலகூடத்திலிருந்து வெளியேறும் மலசலம் : தொற்றுநோய் பரவும் அபாயம்!!

964

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்திலிருந்து மலசலம் வெளியேறி கழிவு நீருடன் கால்வாயில் கலந்து செல்கின்றது. இதனால் பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள உணவகங்கள், வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்திலிருந்து மலசலம் என்பன வெளியேறி கழிவு நீர் செல்லும் கால்வாயுடன் கலந்துள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள உணவகங்கள், வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீசிவருகின்றது. இது குறித்து நகரசபையினருக்கு பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறித்த பொது மலசலகூடம் கேள்வி கோரல் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு 20 ரூபாய் கட்டணம் அறவீடப்பட்டு வருகின்றபோதிலும் குறித்த மலசலகூடத்திலிருந்து மலசலம் கழிவுநீருடன் கால்வாயில் கலந்து செல்கின்றது.

தற்போது மழை காலமாவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகின்றது. நகரசபையின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள குறித்த மலசலகூடத்திற்கு நகரசபையின் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் சென்று நிலைமைகளை ஆராய்வதில்லை, சுகாதாரம் பேண எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே மலசலகூடத்திலிருந்து மலசலம் வெளியேறுவதால் குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

எனவே இதற்கு அவசரமான நடவடிக்கையினை நகரசபையினர் மேற்கொள்ளுமாறு உணவகத்தினர் உரிமையாளர்களும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் கோரியுள்ளனர்.

அத்துடன் குறித்த மலசலகூடத்திற்கு பல தூர பிரதேசங்களிலிருந்து வரும் ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சொல்லெண்ணாத்துயரங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நகரின் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து இப்பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.