கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு!!

566

kanakarajகிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்றினை நடாத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய காரியாலயமானது கடந்த வருடம் முதல் கிளிநொச்சி மாவட்டத்திலே தனது உப அலுவலகம் ஒன்றை திறந்து தனது சேவையை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தில் கட்டாயமானதாகும்.

குறிப்பாக சிவில் சமூக அமைப்புகளோடு இணைந்து எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பிலான செயலமர்வு ஒன்றை ஆணைக்குழு ஒழுங்கு செய்துள்ளது என அதன் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த செயலமர்வானது எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை யாழ்.மாவட்டத்திலும் அவ்வாறானதொரு செயலமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.