வவுனியாவில் ஜனாதிபதி செயலக ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் செயலமர்வு!!

630

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் வவுனியா அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தால் இச் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர் உரிமை, சட்டம், போதைப் பொருள் தடுப்பு, பால்நிலை சமத்துவம் ஆகிய விடயங்கள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபர் அப்துல் நஸார் தலைமையில்
செட்டிகுளம் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.இளஞ்சிங்கம், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் இ.கோகுலதாஸ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ.ஜனார்த்தனன், குடும்ப நல உத்தியோகத்தர் பர்ஜானா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.