வவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு!!

1060

childவவுனியா அட்டமஸ்கட மதகுருவுக்கு எதிராக 12 வயது சிறுவன் ஒருவன் நேற்று நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக சிறுவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அதன் முகாமையாளரான விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் 12 வயது சிறுவன் ஒருவன் தனக்கும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தான் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகவும் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளான். நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வவுனியா பொலிசிலும் முறையிடப்பட்டுள்ளது.