வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று (04.11) மதியம் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பொன்சேகா அவர்களின் நெறிப்படுத்தலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ்த டி சில்வா தலைமையில் ஏ9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது,
யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் 1 கிலோ 126கிராம் கேரள கஞ்சாவினை எடுத்துச்சென்ற சம்மாந்துறை பகுதியினை சேர்ந்த 24, 28, 29 வயதுடைய மூவரையும் அவர்கள் பயணித்த காரினையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.











