சவப்பெட்டியில் வைத்து ஆணி அடிக்கப்படுகின்றது : மைத்திரி மீது ரணில் ஆதங்கம்!!

512

நாடாளுமன்ற கூட்டத் தொடரை பின்தள்ளிப் போடுவதால் நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஒவ்வொரு ஆணிகள் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் திகதியே கூட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்தே தனது டுவிட்டர் தளத்தில் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாடாளுமன்ற கூட்டத் தொடரை பின்தள்ளிப் போடுவதால் நாட்டின் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து ஒவ்வொரு ஆணிகள் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாட்டு மக்களின் இறைமை ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்” எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.