கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 08.11. 2018 வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை முதல் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று மாலையில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.







