வவுனியாவில் தேக்கவத்தைப் பகுதியில் இன்று (10.11) மாலை 3மணியளவில் ஹெரோயினை தமது உடமையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயினை தமது உடமையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து 520 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
35 வயதுடைய பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவரையே கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.





