வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் ஒளிவிழா!!

1292

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (10) ஒளிவிழா நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தார்.

ஒளி விழா நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், ஏஞ்சல் நடனம், மீனவ நடனம், அபிநய நடனம் மற்றும் நாடகம் என்பன அரங்கேற்றப்பட்டிருந்தது.

பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற ஒளிவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிரதம விருந்தினருக்கு ஒளிவிழா நினைவுப்பரிசில் பாடசாலை அதிபரால் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்
.
நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு ஒளிவிழா நினைவுப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியில் நத்தார் தாத்தாவின் நடன நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

ஒளிவிழா நிகழ்வில் வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ம.ஜெயபாலன் அடிகளார் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கியிருந்தார்.