ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு 70 ஆயிரம் சதுர மீட்ட பரப்பில் ஒரு புதிய மைதானத்தை உருவாக்கும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது
இதில் 25 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மைதானம் அமைப்பதற்கு ஜப்பான் விளையாட்டு ஆணையம் பல்வேறு துறை வல்லுநர்களை கலந்து ஆலோசித்து மிகப்பெரிய மைதானம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டது.
மைதானத்த்தின் மேற்கூரை அமைப்பதற்கு மட்டுமே 10 பில்லியன் முதல்15 பில்லியன் வரையிலான எண் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 185.2 பில்லியன் எண் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தயாராகும் என்றும் கூறப்பட்டுள்ளது.





