தென் இலங்கை விடுதியொன்றில் ரஷ்ய பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!!

432

abuseகாலி மாவட்டம் ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யத்தேஹிமுல்ல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணை விடுதியின் ஊழியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

ரஷ்ய பெண் தனது கணவருடன் அந்த விடுதியில் தங்கியிருந்தார். கணவர் விடுதியில் இருந்து வெளியில் சென்றிருந்த போது விடுதி ஊழியர் ரஷ்ய பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்த ரஷ்ய பிரஜைகள் ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள இந்த விடுதியில் தங்கியிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி ஊழியர் 19 வயதான இளைஞன் என தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.