புது ஹீரோக்களுடன் நடிக்க தயார் : அமலாபால்!!

510

Amalaபுது ஹீரோக்களுடன் நடிக்க தயார் என்று அமலாபால் அறிவித்து உள்ளார். விஜய்யுடன் அமலாபால் நடித்த தலைவா படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசானது. தற்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுசுடன் வேலை இல்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார்.

தெலுங்கில் ஒரு படத்திலும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அமலாபால் அடம்பிடிப்பதாக செய்திகள் வந்தன. இதனை அவர் மறுத்துள்ளார். இது குறித்து அமலாபால் கூறியதாவது..

நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடிக்கிறேன். எனக்கு கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் உடனே ஒப்புக்கொள்கிறேன். பெரிய ஹீரோவுடன்தான் நடிப்பேன் என்று கட்டாயப்படுத்துவது இல்லை. கதை பிடித்து இருந்தால் புது ஹீரோக்களுடனும் நடிப்பேன் என்று கூறினார்.