இந்திய மீனவர்கள் 32 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு!!

569

jailஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் புல்மோட்டை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தில் இந்திய மீனவர்கள் 32 பேரையும் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 32 பேரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ம் திகதிவரைக்கும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதவான் யு.எல்.எம்.அஸ்ஹர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் புல்மோட்டை கடற்பரப்பில் 04 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 32 பேரும் 02 மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை இந்த மீனவர்களின் 04 படகுகளும் கப்பல் கட்டும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.