இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விரைவில் தனது காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.
இந்திய அணிக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடியவர் சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.
இவருக்கும் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பாலிகலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
கடந்தாண்டு ஜிம் ஒன்றில் தினேஷ் கார்த்திக்கும், தீபிகாவும் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பில் காதல் மலரவில்லை என்றாலும் இருவரும் ஒரே உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனைகளை பெற்று உடற்பயிற்சி செய்து வந்துள்ளனர்.
நட்பாக பழக ஆரம்பித்த இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது, இவர்களது விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தினேஷ் கார்த்திக், தீபிகா ஜோடிக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதில் இருதரப்பை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமண திகதி இன்னும் முடிவாகாத நிலையில், அடுத்தாண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என நெருங்கிய வட்டராங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு தனது சிறுவயது தோழியான நிதிகா வன்ஜரா என்பவரை திருமணம் செய்தார் இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





