வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்ப குருபூஜை!!

1302

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஐயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் நேற்று (26.11.2018) காலை 11 மணியளவில் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபு தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

இப் பூஜையில் அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத் தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி), வவுனியா மாவட்ட குருசாமிகள் மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.