பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!!

482

Rahuramபிரபலமான நடன இயக்குனரான ரகுராம் இன்று காலமானார். அவருக்கு வயது 64. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் வடிவமைத்து பிரபலமானவர்.

தமிழ் திரையுலகில் 50 வருடங்கள் பணியாற்றிதற்கு இவருக்கு விழா எடுக்கப்பட்டது. நடிகை காயத்திரி ரகுராம் மற்றும் நடன இயக்குனர், நடிகை சுஜா ரகுராம் ஆகியோர் இவரது மகள்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று மதியம் 1 மணிக்கு அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு டிசம்பர் 1ம் திகதி நடைபெறவிருக்கிறது.
பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும், இவரது மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.