இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் : ப.சிதம்பரம்!!

472

Chidambaramஇலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்டு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது..

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது.

அதேவேளையில் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு என்றுமே கைவிடாது.



பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பா.ஜ.க ஆதரவு தரவில்லை. இலங்கை தமிழர்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று முதல்வர் விக்னேஷ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.