வினோத் காம்ப்ளியின் உடல் நிலை முன்னேற்றம்!!

467

kambliஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. மும்பையை சேர்ந்த 41 வயதான இவர் தனது காரில் செம்பூரில் இருந்து பாந்தாரவுக்கு சென்றார்.

காரில் சென்ற கொண்டிருந்த போது காம்ப்ளிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரை வீதியோரம் நிறுத்தி உதவிக்காக ஹோன் சத்தத்தை அழுத்தினார்.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் அம்புலன்ஸ் மூலம் காம்ப்ளியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

வினோம் காம்ப்ளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவமனையின் இயக்குனர் நரேந்தரா திரிவேதி இன்று கூறும்போது..

காம்ப்ளி உடல் நிலை சீராக உள்ளது. கவலைப்படுதற்கு ஒன்றுமில்லை என்றார். காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியாவும் காம்ப்ளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காம்ப்ளி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது இரத்த நாளங்களில் ஏற்பட்ட இரண்டு அடைப்பை ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மூலம் அகற்றி இருந்தார். அவர் பள்ளி பருவத்தில் டெண்டுல்கருடன் இணைந்து 664 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடதக்கது.