பம்பலபிட்டி நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரியின் சடலம் மீட்பு!!

675

dead-bodyபம்பலபிட்டிய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி கட்டடத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இலங்கையின் சவுதி அரேபிய தூதரகத்தில் பணிபுரியும் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீராடச் சென்ற அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் பம்பலபிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. பம்பலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.