இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பில் சிதம்பரத்தின் கூற்றை நிராகரித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை!!

561

congஇலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் சென்னையில் கூட்டிய மாநாடு, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியாவின் பங்கு என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த மாநாடு சிதம்பரம் தனிப்பட்ட ரீதியில் ஏற்பாடு செய்த மாநாடாக அமைந்திருந்தது. இந்த மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில் தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர்கள் இலங்கை தமிழர்கள் தொடர்பில் உரிய தெளிவாக்கலை தமிழகத்தில் மேற்கொள்ளவில்லை என்று பா.சிதம்பரம் இந்த மாநாட்டின் போது குற்றம் சுமத்தினார்.

எனினும் இதனை மறுத்துள்ள ஞானதேசிகன் இவ்வாறான 7 மாநாடுகளை தாம் நடத்தியுள்ளதாகவும் அதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காங்கிரஸின் தலைமை இன்னமும் தமிழ் நாட்டுக்கென்று மாவட்ட அலுவலக தலைமைகளை நியமிக்காமை இவ்வாறான கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கு வாய்ப்பை தரவில்லை என்றும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்.

அத்துடன் குலாம் நபி ஆசாத்துக்கு பதிலாக தமிழக காங்கிரஸ் செயலாளர் ஒருவர் பதவியேற்காமையும் தமிழக காங்கிரஸ் தரப்பில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.