குழந்தை பெற்றுத்தராத மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவன்!!

507

MURDERஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பமாகாததால் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் தஹனு தாலுகாவில் உள்ள ஒரு பண்ணையில் இருக்கும் குடிசையில் வசித்து வந்தவர்கள் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பரத் லடாக் பாராவி (35) மற்றும் அவரது மனைவி சங்கீதா(30).

அவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் சங்கீதா தாயாகவில்லை. இதனால் பரத் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் குழந்தை விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் கோடாரியை எடுத்து சங்கீதாவின் முகம், வயிறு மற்றும் சில பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.

இதில் சங்கீதா பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் பரத்தை தேடி வருகின்றனர்.