வினோத் காம்ப்ளியின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்!!

493

vinothஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உயிரை பொலிஸ் இன்ஸ்பெக்டர் காப்பாற்றியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த மாதம் 29ம் திகதி சேம்பூருக்கு சென்றுவிட்டு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு பஜேரோ காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மதுங்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்த போது, கார் ஓட்டி வந்த காம்ப்ளிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தினார்.

இதனை பார்த்த போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் குமார்தத்தா ஷெட்கே, வாகனத்தின் அருகில் சென்று பார்த்த போது காம்ப்ளி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா பாட்டிலுக்கு தகவலளித்தார்.

விரைந்து வந்த சுஜாதா காம்ப்ளியின் நிலைமையை பார்த்துவிட்டு, போக்குவரத்து நெரிசலில் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது கடினம் என்பதை உணர்ந்தார்.

உடனே காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு போன் செய்து, லீலாவதி மருத்துவமனைக்கு செல்லும் வழியை ஒழுங்குப்படுத்தி கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சுஜாதாவும், குமார்தத்தாவும் சேர்ந்து காம்ப்ளியை 12 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றினர். தற்போது காம்ப்ளியின் உடல் நிலை தேறி வருவதாக அவரது மனைவி ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.