இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இவர் தனது தோழி அனுபூதியைத் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.
மொராதாபாத் நகரில் நடந்த இத்திருமணத்தில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் அணி வீரர்கள், பியூஷ் சாவ்லாவின் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.
இர்ஃபான் பதான், புவனேஷ்வர் குமார், ஜெயேந்திர பாண்டே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
பியூஷ் சாவ்லா இதுவரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டி, மற்றும் 25 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.





