ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராம சக்தி தொடர்பான செயலமர்வு வவுனியா உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வறுமையை ஒழித்தல் பாரிய இலக்கை அடையும் முகமாக கிராமசக்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மக்களின் பொருளாதார விருத்திக்கான பல்வேறு உதவித்திட்டங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல் செயலமர்வு கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமமட்ட தலைவர்கள் ஆகியோருக்கு இடம்பெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.







