மகாவலி கங்கையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை மகாவலி கங்கையில் ஆழமான பகுதியில் இளைஞர்களும் சிறுமியும் நீராடியுள்ளனர். இதன் போது குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை கண்ட பொதுமக்கள் சிறுமியையும் இளைஞனையும் உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் நாவலபிட்டி பல்லேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற குறித்த இளைஞனைச் சடலமாக மீட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளுக்காக கம்பளை நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







