வவுனியாவில் நாம்பட்ட துன்பங்கள் எமது சந்ததியினர் அனுபவிக்க இடமளியோம் என போராட்டம்!!

1182

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து வவுனியா பொதுமக்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த மக்கள் மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் வன்முறைவேண்டாம், நாம் ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றோம், 30 வருட யுத்தத்தின் துயரங்கள் போதும், மீண்டும் ஒரு யுத்தம் எனும் சொல்கூட எமது நாட்டிற்கு வேண்டாம். நாம் பட்ட துயரங்கள் எமது சந்ததியினர் அனுமதிக்க இடமளிக்க மாட்டோம் போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான போராட்டம் பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் முடிவடைந்துள்ளது.