மலவாயிலில் மறைத்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது!!

1086

goldமலவாயிலில் மறைத்து வைத்து தங்கம் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4.05 மணியளவில் இந்தியாவை நோக்கி பயணிக்க தயாராகவிருந்த நிலையில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் தங்க பிஸ்கட்டுக்கள் நான்கை கடத்த முயன்றுள்ளார். இந்த தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 1,935,000 ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

தங்க பிஸ்கட்டுக்கள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் 2,50,000 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.