குரங்குக் கூட்டம் வீதிக்குள் வந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி!!!

666

monkeysதிருகோணமலை உப்புவெளி அபயபுர வீதியில் 3 வது மைல்கல் பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்று வீதிக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குரங்குக் கூட்டம் ஒன்று வீதிக்குள் நுழைந்ததால் அந்த வீதியில் பயணம் செய்த ஒருவர் தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாது மரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

27 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த இவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பஸ்தியன் ஹஸ்கிசன் வீதியை சேர்ந்த பாக்கியராஜா கௌரிசங்கர் என்ற இளைஞரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். மரண விசாரணைகள் நேற்று இடம்பெற்றன.