உயரமான நடிகை என்று கேலி பேசுவதால் கவலை இல்லை : அனுஷ்கா!!

652

Anuskaதமிழ், தெலுங்கு திரையுலகில் உயரமான நடிகை என வர்ணிக்கப்படுபவர் அனுஷ்கா. இதுபோல் குள்ளமான நடிகை என அழைக்கப்படுபவர் நித்யா மேனன்.

நெட்டையாக இருப்பதால் அனுஷ்கா சில பட வாய்ப்புகளை இழந்ததாக கூறப்படுகிறது. குட்டையான ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர மறுக்கிறார்கள். இதுபோல் நித்யாமேனன் வளர்த்தியான ராணா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர முடியவில்லை. இதனால் அவரும் பட வாய்ப்புகளை இழந்து போனார் என்கின்றனர்.

வருத்தத்தில் இருக்கும் நித்யாமேனனுக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி தைரியமூட்டியுள்ளார். அவர் கூறியதாவது..

உயரமாக இருப்பது பற்றியோ குட்டையாக இருப்பது பற்றியோ யார் என்ன விமர்சனம் சொன்னாலும் பொருட்படுத்த கூடாது. நான் அதுபற்றி கவலைப்படுவது இல்லை. மக்கள் எப்போதும் மற்றவர்களைதான் குறை காண்கிறார்கள். உயரமாக இருந்தாலும் விமர்சிக்கிறார்கள். குள்ளமாக இருந்தாலும் குறை சொல்கிறார்கள்.

ஒருவர் மெலிந்து இருந்தால் ஒல்லி என்கின்றனர். கொஞ்சம் சதை போட்டு இருந்தால் குண்டு என்கின்றனர். இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது என்று அனுஷ்கா கூறியுள்ளார்.