சிம்புவுடன் நடிக்க நயன் தாரா புது நிபந்தனை விதித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கனவே வல்லவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். 2006ல் இப்படம் ரிலீசானது. அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். சில மாதங்களிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ள வில்லை. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிம்புவுடன் நடிக்க நயன்தாராவை அணுகிய போது முதலில் தயங்கினார் என்றும் கதையை கேட்டு பிடித்து போனதால் நடிக்க சம்மதித்தார் என்றும் பாண்டி ராஜ் தெரிவித்தார். வருகிற 5ம் திகதி சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
சிம்பு-நயன்தாரா நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இரண்டு நாட்கள் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு ஜனவரி மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் சிம்புவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லவன் படப்பிடிப்பில் போஸ்டர் விளம்பரத்துக்காக நயன்தாராவின் உதட்டை சிம்பு கடிப்பது போன்று படம் பிடிக்கப்பட்டது. இந்த போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஓட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அது போன்ற காட்சிகளை எடுக்கக் கூடாது என்று நயன்தாரா கண்டிப்பாக கூறியுள்ளாராம்.
அத்துடன் காதல் காட்சிகளில் சிம்புவை கட்டிப்பிடித்து நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளாராம். நயன்தாரா நிபந்தனைகள் ஏற்கப்பட்டு உள்ளது.





