நிர்வாணமாக வேறொருவரின் வீட்டில் உறங்கிய நபர் : கட்டி வைத்து உதைத்த உரிமையாளர்கள்!!

574

adiயாழ்ப்பாணம், ஓட்டுமடம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து நிர்வாணமாய் உறங்கிய நபரொருவரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நேற்று அதிகாலை அதே பகுதியினைச் சேர்ந்த நபர் மது போதையில் வேறொருவரின் வீட்டின் கதவினை உடைத்துகொண்டு அத்துமீறி நுழைந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற குறித்த நபர் வீட்டில் இருந்த நபர்கள் ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களுடன் இணைந்து தானும் உறங்கியுள்ளார்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட வீட்டுக்காரர்களில் ஒருவர், புதிதாக ஒருவர் தூங்குவதையும், அவரது நிலையையும் கண்டு அதிர்ச்சியடைந்து ஏனையவர்களுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து விழித்துக் கொண்ட ஏனையவர்கள் குறித்த நபரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடிகொடுத்துள்ளனர்.

அடி வாங்கிய குறித்த நபர் நான் எவ்வாறு இங்கு வந்தேன் , என்ன நடந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை பெரித்துபடுத்தாமல் வீட்டுக்காரர்கள் அந்த நபரை விடுவித்துள்ளதாக தெரியவருகிறது.