புகையிரத தொழிற்சங்கங்கள் சில, வேலைநிறுத்தப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நள்ளிரவு முதல் சில தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் அதிகாரிகள் இதுவரையில் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகை மற்றும் விடுமுறை காலமான தற்போது புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தால் இலங்கை மக்கள் போக்குவரத்தில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.





