ஜா-எல தெற்கு நிவந்தம பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காணி தொடர்பான சர்ச்சையில் இந்த கொலை நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி அவரது வீட்டில் இருந்தபோது சந்தேக நபர் குறித்த வீட்டுக்குச்சென்று கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சந்தேக நபரைத் தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரியின் மனைவியும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரியின் மனைவி தற்போது ராகம அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸ் உத்தியோகத்தர் 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
தங்களின் உறவினர்களுடன் 24வது திருமண நாளை கொண்டாடும்போது இந்த தாக்குதல் சம்பவம் இடமபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.