கல்கிஸ்ஸயில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 19வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் படுகாயமடைந்துள்ளார்.
அக்ஷு பெர்ணான்டோ என்ற வீரர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு தூய தோமியர் கல்லூரியில 19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்.
இலங்கை A அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான வீரர்களில் ஒருவராக தெரிவாகி அவர், ராமக கிரிக்கெட் கழகத்தில் விளையாடி வருகின்றார்.
கல்கிஸ்ஸ கடல் கரைக்கு அருகில் இடம்பெற்ற பயிற்சிகள் நிறைவடைந்து வீடு நோக்கி செல்லும் போது அவர் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது உடம்பில் பலத்த காயமேற்கொள்ளப்பட்ட போதிலும் மூளைக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எதிர்கால இலங்கை அணிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக அவர் கருதப்படுவதாக சக வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





