இந்தியாவுடன் எந்நேரத்திலும் போர் வெடிக்கும் : பாகிஸ்தான் பிரதமர் அதிர்ச்சி!!

668

pakஇந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சில் கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரை மையமாக வைத்து அணுஆயுத வல்லமை கொண்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து காஷ்மீர் விடுதலை பெறுவதே தமது கனவு என்று கூறியுள்ள நவாஸ் தமது வாழ்நாளில் இது நனவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அங்குள்ள மக்களின் விருப்பத்தின் பேரிலேயே தீர்வு காண முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஆயுதப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தானும் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நிதியை கொண்டு வறுமையை ஒழிக்கவும், சமூக திட்டங்களுக்கு செலவிடவும் முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால் நவாஸ் ஷெரீப்பின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கள், பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.