பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் சேவை செய்யும் நபர்களுக்காக பிரித்தானிய அரசு வருடாந்தம் விருது வழங்கி வருகிறது.
இந்தப் பட்டியலில் OBE – Order of the British Empire என்ற விருது இலங்கையை சேர்ந்த ட்ரூடி நிமாலி செனவிரத்ன என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
நிமாலி பிரித்தானியாவில் மனநல வைத்தியராக செயற்பட்டு வருகின்றார். நிமாலியின் தந்தை வைத்தியராக செயற்பட்டதுடன் அவரது தாயார் ஒரு தாதியாக செயற்பட்டுள்ளார்.
7 வயதாக இருக்கும் போது பிரித்தானியா சென்ற நிமாலி, வைத்தியராக பட்டம் பெற்றுள்ளார்.
லண்டனில் உள்ள மோட்ஸ்லி தேசிய சுகாதார அறக்கட்டளையில் நிமாலி பணியாற்றி வருகிறார். அவர் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் போதும் பிரசவத்திற்கு பின்னரும் மன நல ஆலோசனை மற்றும் சுகாதார அபிவிருத்திக்காக செயற்பட்டு வரும் வைத்தியராகும்.
விருது வழங்கப்பட்டமை தொடர்பில் நிமாலி பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டார்.
தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இவ்வாறு ஒன்று நடக்கும் என தான் நினைக்கவே இல்லை என்றும் நிமாலி குறிப்பிட்டுள்ளார்.