சுரேஷ் ராகவன்

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். அதன்படி , வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஊவா மாகாண புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக தம்ம திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , கடந்த வௌ்ளிக்கிழமையன்று மேல் , மத்திய , வடமத்திய , வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான 5 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர். அதன்படி , 8 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ,இன்னும் தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மாத்திரம் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.