மலேசியா, சிங்கப்பூரில் ஐ.பி.எல் போட்டிகள்?

521

IPLமலேசியா அல்லது சிங்கப்பூரில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்தலாம் என்று கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தப்போட்டி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இதுவரை 6 ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒரே ஒரு முறை இந்தப்போட்டி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்தது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் 7வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

7வது ஐ.பி.எல். போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஆட்டங்களையும் அங்கு நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இதனால் ஐ.பி.எல். போட்டியின் சில ஆட்டங்களை சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் நடத்தலாம் என கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.