2013ம் ஆண்டுக்கான இலங்கையின் பணக்கார தரவரிசையில் தம்மிக்க பெரேரா என்பவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட சொத்தாக 538,000,000 அமெரிக்கன் டொலர் அல்லது 70 பில்லியன் ரூபாய்களை கொண்டிருக்கிறார்.
இந்த பட்டியல் போபஸ் ஏசியாவினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சோஹ்லி கெப்டன் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்துப் பெறுமதி 423 மில்லியன் டொலர்கள் அல்லது 55 பில்லியன் ரூபாய்களாகும்.
வங்கியாளர் ஹரி ஜெயவர்த்தன 307 மில்லியன் டொலர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதேவேளை முதல்தர பணக்கார பெண்ணாக சோனியா வெய்ன்மென் தெரிவாகியுள்ளார். இவர் ஹரி ஜெயவர்த்தனவின் வர்த்தக பங்காளியாவார். இவரின் சொத்துப்பெறுமதி 76மில்லியன் டொலர்களாகும்.