சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை கவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். பல மாதங்கள் காத்து இருந்தும் கவுதம்மேனன் பிடித்தமான கதையை தயார் செய்து தரவில்லை என்று சூர்யா கூறினார். அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டார்.
தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். சூர்யாவுடனான சர்ச்சை குறித்து கவுதம்மேனன் விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியதாவது..
சூர்யாவை வைத்து படம் எடுப்பதற்காக அவரிடம் துருவ நட்சத்திரம் கதையை சொன்னேன். அவர் வேறு கதை தயார் செய்யும்படி கூறினார். இதையடுத்து புதிதாக இன்னொரு கதையை தயார் செய்தேன். அதை சூர்யாவிடம் சொன்னேன். அந்த கதையும் வேண்டாம் என்று கூறிவிட்டார். துருவ நட்சத்திரம் படத்தையே பண்ணலாம் என்றும் தெரிவித்தார்.
அவர் சம்மதித்த பிறகு அந்த படத்துக்கான வேலையை துவங்கினோம். கதாநாயகியாக திரிஷா தேர்வானார். பார்த்திபன், அருண் விஜய்யையும் இதர கரக்டர்களுக்கு தேர்வு செய்தோம். இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை முடிவு செய்தோம். படிப்பிடிப்பு நடத்துவதற்கான திகதியும் முடிவானது. படப்பிடிப்பு துவங்கும் நாளில் திடீரென்று இந்த கதை வேண்டாம் என்று கூறி விட்டார்.
அதுமட்டு மல்லாமல் ஒரு வருடமாக ஏன், எதற்கு என நிறைய கேள்விகள் கேட்டார். படம் குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த அறிக்கை மூலம் எனக்கு நிம்மதியும் கிடைத்துள்ளது என்று கவுதம் மேனன் கூறினார்.





