தலைநகர் கொழும்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள் : வியக்கும் உலக நாடுகள்!!

1029

தலைநகர் கொழும்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்

உலகளாவிய ரீதியில் சிறப்பான சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் சிறந்த சுற்றுலா நகரமாக அண்மையில் கொழும்பு தெரிவு செய்யப்பட்டது.

கொழும்பில் நிர்மாணிக்கப்படும் பாரிய வீட்டுத் தொகுதிகள், கடைகள், பாரிய கட்டடங்கள் காரணமாக கொழும்பின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம், கங்காராமைக்கு அருகில் உள்ள பேரே ஏரியிலுள்ள தீவு, எல்டயார் வீட்டுத்தொகுதி ஹில்டன் ரெசிடன்ஸ் வீட்டுத் தொகுதிக்கு பின்னால் கட்டப்பட்டுள்ள தாமரை கோபுரம் ஆகியவைகள் முக்கிய இடங்களாக தெரிவிக்கப்படுகின்றது.

அழகான இலங்கைத் தீவை காண நாளாந்தம் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்து செல்கின்றனர். கொழும்பை அழகுபடுத்தும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.