இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த இரு தீர்மானங்கள் வெற்றிபெற்றமை குறித்து வெளியுறவு அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாசா கேட்டிருந்தார்.
இதற்கு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளிக்கையில் கூறியதாவது..
கடந்த 2011ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப் போவதாக கனடா வெளியுறவு அமைச்சர் கூறினார். ஆனால் அதற்கு ஆதரவு இல்லாததால் அவர்கள் அதை செய்யவில்லை.
ஆனால் இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. அப்பொது நிலைமையே தலைகீழாக மாறியது.
அமெரிக்கா 2012, 2013ம் ஆண்டில் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானங்கள் வெற்றி பெற்றன. காரணம் அமெரிக்காவிற்கு பயந்தே இந்த தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்துள்ளன.
அமெரிக்காவுடனான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படும் என்ற காரணத்தாலேயே நாங்கள் அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரித்தோம். இல்லாவிடில் அவர்களின் ஆதரவை நாங்கள் இழக்கக்கூடும் என்று என்னிடம் அவர்கள் தனிப்பட்ட முறையில் கூறினர் என்று அவர் கூறினார்.